/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

ADDED : ஆக 21, 2024 07:23 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில், குறிப்பிட்ட நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றத்தில், அரசு மருத்துவமனை இயங்குகிறது. திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர், காய்ச்சல், விபத்து காயம் உள்ளிட்டவற்றுக்கு, இங்கு சிகிச்சை பெறுகின்றனர். காலை 11:30 மணி வரை, புறநோயாளிகள் குவிகின்றனர்.
கூட்டம் குறைந்த பின், சிகிச்சைக்காக வருபவர்களிடம், மாத்திரை மட்டும் வாங்கிக் கொள்ளுமாறும், மாலையில் தான் டாக்டரை சந்திக்க முடியும் என்றும் கூறி, பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று, காய்ச்சலால் அவதிப்பட்ட பள்ளி சிறுமியை, பகல் 1:00 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, அவசரம் என்றால், மாத்திரை வாங்குமாறு அறிவுறுத்தி, டாக்டரை சந்திக்க, மாலை 3:00 மணிக்கு பிறகு வருமாறும் கூறி அலட்சியப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி, சிகிச்சை நடைமுறையை முறைப்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.