/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் விளையாட்டு பூங்கா நீச்சல் குளமாக மாறிய அவலம்
/
அச்சிறுபாக்கம் விளையாட்டு பூங்கா நீச்சல் குளமாக மாறிய அவலம்
அச்சிறுபாக்கம் விளையாட்டு பூங்கா நீச்சல் குளமாக மாறிய அவலம்
அச்சிறுபாக்கம் விளையாட்டு பூங்கா நீச்சல் குளமாக மாறிய அவலம்
ADDED : ஆக 11, 2024 02:33 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 5வது வார்டு ராவுத்தநல்லுார் வி.ஐ.பி., நகர், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், அம்ரித் திட்டத்தின் கீழ், 2022 -- 23ல், 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறுவர் விளையாட்டு பூங்கா கட்டப்பட்டது.
இதில், நடைபாதை, ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் டேங்க் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட, அனைத்து வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, இப்பகுதியில் சேகரமாகும் மழை நீர், பூங்கா வளாகம் முழுதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
தாழ்வான பகுதியில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டதால், மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கிறது. அதனால், இரும்புக் கம்பிகளால் ஆன விளையாட்டு சாதனங்கள் வீணாகி வருகின்றன.
நடைபாதையில் பதிக்கப்பட்ட சிமென்ட் கல் சரிந்து, சேதமடைந்து தரமற்ற நிலையில் உள்ளது. மழைநீர் விரைந்து வெளியேறும் வகையில், வழிவகை செய்யப்படாமல் உள்ளது.
அனைத்து பணிகளும் முடிவுற்று, கடந்த ஓராண்டாகியும், இது வரை சிறுவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமலேயே, அரசு பணம் வீணாகி உள்ளது, அப்பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பூங்காவினுள் மழைநீர் தேங்காதவாறு, மண் கொட்டி, சமன்படுத்தி, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர, பேரூராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.