/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு
/
அச்சிறுபாக்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு
அச்சிறுபாக்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு
அச்சிறுபாக்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு
ADDED : செப் 04, 2024 02:14 AM

செய்யூர்:அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ- - மாணவியருக்கு, வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஜூலை 22ம் தேதி துவங்கப்பட்டன.
இதில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என, மொத்தம் 25க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.
இறுதியாக, நேற்று வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தடகளப் போட்டிகளுடன், அச்சிறுபாக்கம் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு செய்யப்பட்டன.
வட்டார அளவிலான தடகளப் போட்டிகளை, மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் அருள் துவக்கி வைத்தார்.
மாணவர்களுக்கான யு - 14 வயது பிரிவு, 100 மீட்டர் ஓட்டத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஹரிஷ், 200 மீட்டர் ஓட்டத்தில், அதே பள்ளியை சேர்ந்த விமல்ராஜ் வெற்றி பெற்றனர்.
யு - 17 வயது பிரிவு, 100 மீட்டர் ஓட்டத்தில், அச்சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி கோகுலகண்ணன், 200 மீட்டர் ஓட்டத்தில் சூணாம்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி கவின் ஆகியோர் வென்றனர்.
யு - 19 வயது பிரிவு, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில், சூணாம்பேடு, அரசு மேல்நிலைப் பள்ளி குருநாத் வென்றார்.
மாணவியருக்கான யு - 14 வயது பிரிவு, 100 மீட்டர் ஓட்டத்தில், ஆண்டார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தேவதாணி, 200 மீட்டர் ஓட்டத்தில், அச்சிறுபாக்கம் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லத்திகா, 400 மீட்டர் ஓட்டத்தில் ஆண்டார்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளி இந்துமதி வெற்றி பெற்றனர்.
யு - 17 வயது பிரிவு, 100 மீட்டர் ஓட்டத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நதியா, 200 மீட்டர் ஓட்டத்தில், கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி தனிஷ்கா, 400 மீட்டர் ஓட்டத்தில், மொரப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஜெயஸ்ரீ ஆகியோர் வென்றனர்.
யு - 19 வயது பிரிவு, 100 மீட்டர் ஓட்டத்தில், கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ்விழி, 200 மீட்டர் ஓட்டத்தில், அதே பள்ளியை சேர்ந்த தமிழினி, 400 மீட்டர் ஓட்டத்தில், வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியர், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.