/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை
/
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை
ADDED : பிப் 28, 2025 11:54 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல் விற்பனை செய்ய வரும்போது, அரசியல் கட்சிகள் ஆதரவோடு இடைத்தரகர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், ஒரு மூட்டை நெல்லுக்கு 45 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை லஞ்சம் பெறுகின்றனர்.
இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதிகளில் உலர்களம், தனியார் உரக்கடைகளில் அரசு அறிவித்த விலையை விட, அதிக விலைக்கு விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்து, லஞ்சம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரக்கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து, அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.