/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு கல்லுாரிக்கு கலையரங்கம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு
/
அரசு கல்லுாரிக்கு கலையரங்கம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு
அரசு கல்லுாரிக்கு கலையரங்கம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு
அரசு கல்லுாரிக்கு கலையரங்கம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்கீடு
UPDATED : பிப் 15, 2025 03:15 AM
ADDED : பிப் 15, 2025 12:51 AM
செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசு கலைக்கல்லுாரிக்கு கலையரங்கம் கட்ட, கூடுதலாக எம்.பி., தொகுதி நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில், அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரிக்கு கலையரங்கம் கட்டித் தர கோரி, கல்லுாரி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தது.
அதன் பின், கலையரங்கம் கட்ட கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், சி.எம்.டி.ஏ., நிதி 1 கோடி ரூபாய், ராஜ்யசபா எம்.பி., வில்சன் தொகுதி நிதியில் 1 கோடி ரூபாய் என, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த அரங்கம், 1,000 மாணவர்களுக்கு மேல் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது. அரங்கத்திற்கு கூடுதல் நிதி தேவைப்பட்டதால், எம்.பி., வில்சனிடம் கல்லுாரி நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
அதன் பின், 2024 - 25ம் நிதியாண்டில், கலையரங்கம் கட்ட கூடுதல் நிதியாக 1 கோடி ரூபாய் நிதி வழங்கி, எம்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையேற்று, இந்நிதியில் கலையரங்கம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.