ADDED : ஆக 04, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:ஆடி அமாவாசை தினத்தில், பொதுமக்கள் மூதாதையருக்கு எள் தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
ஹிந்து மத பாரம்பரியத்தில், மூதாதையர் வழிபாடு இன்றியமையாதது. புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை மற்றும் ஆடி மாத அமாவாசை ஆகிய நாட்களில், மூதாதையர் இப்பூவுலகிற்கு வந்து, தங்கள் சந்ததியினரை ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை.
பிற நாட்களில், அவர்களை வழிபட தவறினாலும், இந்நாட்களில் வழிபட்டு, தர்ப்பணம் செய்து ஆசி பெறுவது சிறப்பு. நேற்று ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு, மாமல்லபுரம் புண்டரீக புஷ்கரணி திருக்குளம், கடற்கரை ஆகிய பகுதிகளில், பொதுமக்கள், மூதாதையரை நினைவுகூர்ந்து, எள், வாழைப்பழம், தேங்காய், மலர் ஆகியவற்றை படைத்து, பட்டாச்சாரியார் மந்திரங்கள் முழங்க வழிபட்டனர்.