/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிடாரி செல்லியம்மன் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
/
பிடாரி செல்லியம்மன் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
பிடாரி செல்லியம்மன் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
பிடாரி செல்லியம்மன் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலம்
ADDED : ஆக 02, 2024 02:13 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மாரிபுத்துார் கிராமத்தின் ஏரிக் கரையில், பிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும், ஆடி மாதம் இரண்டாம் வாரம் தேர் திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.
இந்த ஆண்டும் தேர் திருவிழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். தேர் திருவிழா, ஆடி மாதம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், கடந்த 30ம் தேதி இரவு 9:00 மணிக்கு நடந்தது. பின், நேற்று முன்தினம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லியம்மன், திருத்தேரில் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.
இதில், மாரிபுத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் பங்கேற்று தேர் இழுத்தனர்.
பின், மொட்டை அடித்தும், ஊருணி பொங்கல் வைத்தும், நுாற்றுக்கணக்கான சேவல் மற்றும் ஆட்டுக்கடா பலி கொடுத்தும், தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
பலி கொடுத்த ஆட்டுக்கடாவை அங்கேயே சமைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். தேர் திருவிழாவிற்காக,மதுராந்தகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேற்று காலை 8:30 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மதியம் 2:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்குஆராதனை நடந்தது.