/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு அழைப்பு
/
ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு அழைப்பு
ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு அழைப்பு
ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு அழைப்பு
ADDED : ஜூன் 27, 2024 10:16 PM
செங்கல்பட்டு:ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட் டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன.
இப்பள்ளிகளில் காலி யாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக, 18,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்ற, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், வணிக வியல், பொருளியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், உரிய கல்வி தகுதி சான்று ஆவணங்களுடன், நேரடியாகவோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு, வரும் ஜூலை 5ம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.