/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆடிப்பூரம் விழா வரும் 6ல் விடுமுறை
/
ஆடிப்பூரம் விழா வரும் 6ல் விடுமுறை
ADDED : ஆக 03, 2024 09:18 PM
செங்கல்பட்டு:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறும். நடப்பாண்டிற்கான 53வது ஆண்டு ஆடிப்பூரம் பெருவிழா, வரும் 6ம் தேதி துவங்குகிறது. 7ம் தேதி பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பாலாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளனர். இதனால், சித்தர் பீடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆதிபராசக்தி சித்தர்பீட ஆடிப்பூரம் விழாவையொட்டி, வரும் 6ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்ய, வரும் 31ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.