/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்பத்தை ரசிக்க இன்று அனுமதி இலவசம்
/
மாமல்லை சிற்பத்தை ரசிக்க இன்று அனுமதி இலவசம்
ADDED : மார் 07, 2025 09:58 PM
மாமல்லபுரம்:சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் பாரம்பரிய சிற்பங்களை, இன்று அனைவரும் இலவசமாக காணலாம் என, தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, பிற குடவரைகள் ஆகிய பாரம்பரிய சின்னங்கள் உள்ளன.
இவற்றை, தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது. இத்துறை அனைத்து சிற்பங்களையும் குழு சின்னங்களாக அறிவித்து, நுழைவுக் கட்டணமாக, இந்தியருக்கு தலா 40 ரூபாய், சர்வதேச பயணியருக்கு தலா 600 ரூபாய் வசூலிக்கிறது.
ஓரிடத்தில் நுழைவுச்சீட்டு பெற்று, அனைத்து சிற்பங்களையும் கண்டு ரசிக்கலாம்.
ஓராண்டில், உலக பாரம்பரிய நாள் ஏப்., 18ம் தேதி, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி, உலக பாரம்பரிய வார துவக்க நாள் நவ., 25ம் தேதி ஆகிய நாட்களில், சுற்றுலா பயணியரை இலவசமாக தொல்லியல் துறை அனுமதிக்கிறது.
அந்த வகையில், சர்வதேச பெண்கள் தினமான இன்று, அனைவரையும் இலவசமாக அனுமதிப்பதாக, அத்துறை அறிவித்து உள்ளது.