/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அ.தி.மு.க., பூத் ஏஜன்ட் மண்டை உடைப்பு
/
அ.தி.மு.க., பூத் ஏஜன்ட் மண்டை உடைப்பு
ADDED : ஏப் 20, 2024 08:12 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வடகால் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ், 36. அ.தி.மு.க.,வில் அப்பகுதியில் கிளை செயலராக உள்ளார்.
நேற்று லோக்சபா தேர்தலுக்கு வடகால் அரசு துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடியில், அ.தி.மு.க., சார்பில் பூத் ஏஜன்டாக இருந்தார்.
அதே பூத்தில், தி.மு.க., சார்பில், ஊராட்சி தலைவர் கவுதம், 35, பூத் ஏஜன்டாக இருந்தார். அப்போது, கவுதம் மற்றும் ஹரிதாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் பூபாலன், ஆனந்தன், ஜானகிராமன் உள்ளிட்டோர் இணைந்து, ஹரிதாஸை சரமாரியாக தாக்கியதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ஓட்டுச்சாவடியில் இருந்த போலீசார் ஹரிதாஸை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பிச்சென்ற கவுதம் உள்ளிட்ட நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

