/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் நகரசபை கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
மறைமலை நகர் நகரசபை கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மறைமலை நகர் நகரசபை கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மறைமலை நகர் நகரசபை கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 02, 2024 08:42 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., 14, அ.தி.மு.க., 5, ஐ.ஜே.கே., 1, சுயேச்சை 1 என, கவுன்சிலர்கள் உள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில், நேற்று மதியம் நகரசபை கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., நகரசபை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில், 21 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.
இதில், மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான நாள் குறிப்பேடு, மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில், குடிநீர், மின்விளக்கு, மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள் உள்ளிட்ட, 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது, மறைமலை நகரின் முக்கிய சாலையில் ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் எனவும், 20வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மூர்த்தி வலியுறுத்தினார்.
அதற்கு, வாகன நிறுத்தம் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடைபாதை வியாபாரிகளுக்கு, நகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், நகரசபை தலைவர் சண்முகம் கூறினார்.
அப்போது பேசிய 10வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கோபி கண்ணன், நகராட்சியின் செயல்பாடுகள் குறித்து, சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
நகராட்சி முழுதும் மாடுகள் மற்றும் நாய்கள் சுற்றுவதாகவும், கடந்த மாதம் தெருவில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி கொன்ற சம்பவத்திற்கு பின்னும், அவற்றை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என, கண்டித்தார்.
அதோடு, 8வது வார்டில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட சமுதாய கூடம், இடண்டாண்டுக்கு மேல் ஆகியும் ஏன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என, கேள்வி எழுப்பினார்.
மேற்கு பொத்தேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், நகராட்சி ஏன் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக்கூறி, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மூர்த்தி உள்ளிட்ட அ.தி.மு.க.,வின் ஐந்து கவுன்சிலர்களும், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.