ADDED : செப் 04, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம் செம்பாக்கத்தில், குப்பை, சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை என புகார் உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காமராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாவட்ட கழக செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.