/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
/
பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை
ADDED : ஜூலை 06, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், பெரியகயப்பாக்கம் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக, 'அட்மா' திட்டத்தில் பயிர் பாதுகாப்பு குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், மண் பரிசோதனை, விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், விதைப்பு முறைகள், உயிர் உரங்கள் மற்றும் சீரான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்து, ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், பயிர் காப்பீடு பதிவு செய்தல் மற்றும் அதன் பயன் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில், பெரியகயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.