/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு அறிவுரை
/
உயர்கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு அறிவுரை
உயர்கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு அறிவுரை
உயர்கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : செப் 11, 2024 08:27 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ் - 2வில் தேர்ச்சி பெற்று, கல்லுாரியில் சேராத மாணவர்களுக்கான நான் முதல்வன் - உயர்வுக்கு படி பயிற்சியை, கலெக்டர் அருண்ராஜ் துவக்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மாவட்டத்தில், பிளஸ் - 2, பத்தாம் வகுப்பில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையாக, தலா 50,000 ரூபாய் வழங்கியுள்ளோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வங்கியில் வைப்பு தொகையாக வழங்கி உள்ளோம்.
பிளஸ் - 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கல்லுாரியில் சேருவதற்காக வழங்கி உள்ளோம். உயர்கல்வியில் சேர முடியாத சூழலில் உள்ள மாணவர்களை, கல்லுாரிகளில் சேர்த்து வருகிறோம்.
மாவட்டத்தில், 50 சதவீதம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில், உயர் கல்வி படிக்க, 90 சதவீதம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதேபோல், நம் மாவட்ட மாணவர்களும் உயர்கல்வி படிக்க முன்வரவேண்டும்.
செங்கல்பட்டு அறிவுசார் மையத்தில், நீட் தேர்வுக்கு பயிற்சி மையம் செயல்படுகிறது. போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி மையம் துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சப்- - கலெக்டர் நாராயணசர்மா, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.