/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடையாறு கே.வி.பள்ளி மாணவி மண்டல வில்வித்தையில் சாம்பியன்
/
அடையாறு கே.வி.பள்ளி மாணவி மண்டல வில்வித்தையில் சாம்பியன்
அடையாறு கே.வி.பள்ளி மாணவி மண்டல வில்வித்தையில் சாம்பியன்
அடையாறு கே.வி.பள்ளி மாணவி மண்டல வில்வித்தையில் சாம்பியன்
ADDED : ஜூலை 31, 2024 11:39 PM

சென்னை : தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான்ஆகிய பகுதிகளில் இயங்கி வரும், மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகள் இடையிலான, 53ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள், சென்னைமீனம்பாக்கத்தில்உள்ள பள்ளி வளாகத்தில் நடந்தன.
இதில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கானவில்வித்தை போட்டியில், 20 மீ., மற்றும் 30 மீ., போட்டியில் பங்கேற்ற சென்னை, அடையாறு கே.வி.பள்ளி மாணவி சங்கமித்ரா, முதலிடம் பிடித்து அசத்தினார்.
தவிர, இதே பிரிவின் கீழ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
இரண்டு தங்கம்மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் என, மூன்று பதக்கங்கள் வென்று அசத்திய மாணவிசங்கமித்ராவை பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர்மற்றும் சக மாணவியர் பாராட்டினர்.