/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
10 ஆண்டுக்கு பின் புதிய சாலை மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
/
10 ஆண்டுக்கு பின் புதிய சாலை மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
10 ஆண்டுக்கு பின் புதிய சாலை மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
10 ஆண்டுக்கு பின் புதிய சாலை மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 09, 2024 06:40 AM

திருப்போரூர்: திருப்போரூர் - மானாமதி இடையே சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலை வனத்துறையினர் எதிர்ப்பால், சீரமைப்பு பணி, 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. பின், மக்களின் கோரிக்கை மனு மற்றும் பல்வேறு போராட்டங்களுக்கு பின், சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 28 கோடி ரூபாய் மதிப்பில், திருப்போரூர் முதல் மானாமதி வரை, 10 கி.மீ., தொலைவுக்கு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இச்சாலையில் சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பகுதிகளில், கால்நடைகள் பகல், இரவு என, எப்போதும் உலா வருகின்றன.
ஒவ்வொரு பகுதியிலும், கும்பலாக, 20க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்துக் கொண்டும், சுற்றிக்கொண்டும் வருகின்றன.
இதனால், மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பல்வேறு போராட்டங்களுக்கு பின், 10 ஆண்டுகளுக்கு பிறகு அமைக்கப்பட்ட புதிய சாலையில், மாடுகளின் தொல்லையால் தற்போதும் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல், அப்பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, போக்குவரத்து பாதுகாப்பு கருதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.