/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'குடி'மகன்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பிரமுகருக்கு குத்து
/
'குடி'மகன்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பிரமுகருக்கு குத்து
'குடி'மகன்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பிரமுகருக்கு குத்து
'குடி'மகன்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பிரமுகருக்கு குத்து
ADDED : பிப் 27, 2025 12:08 AM

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றத்தில், மாட்டுக் கொட்டகையில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட அ.தி.மு.க., பேரூர் செயலருக்கு கத்திக்குத்து விழுந்தது.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 36; அ.தி.மு.க., பேரூர் செயலர்.
இவரது வீட்டிற்கு அருகிலுள்ள, இவருக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டகையில் சிலர், சில நாட்களாக முகாமிட்டு மது அருந்தியுள்ளனர்.
அவர்களை தினேஷ்குமார் தட்டிக்கேட்ட போது, அவரை மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், 'புல்லட்' வாகனத்தில் வீட்டின் அருகில் சென்ற போது, அவரை சிலர் வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர்.
அவர்களை தடுக்க முயன்ற, இவரது உறவினர் மோகன், 33, என்பவரையும் தாக்கியுள்ளனர்.
அங்கிருந்தோர் இவர்களை மீட்டு, திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் முதலுதவி கிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக, அதே ஊரைச் சேர்ந்த யோகேஷ் என்கிற வினோத், 33, அப்பு என்கிற கவுரிசங்கர், 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.