/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
/
அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : பிப் 22, 2025 10:10 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொது நல சங்கத்தின் 12வது ஆண்டு விழா மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் மதுராந்தகத்தில் நேற்று நடந்தது.
மதுராந்தகம் சங்க தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று பேசினார். மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில தலைமை செயலர் ராஜ்குமார் பங்கேற்றனர்.
மதுராந்தகத்தில் மே - 5ல், நடைபெறும் வணிகர் தின மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுத்தல், மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகளின் வணிகர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துதல், மதுராந்தகம் நகராட்சியில் குடிநீர் குழாய் அமைக்க சாலைகளில் பள்ளம் தோண்டியுள்ளதை சீரமைக்க வலியுறுத்துதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.