sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா விற்பனை அமோகம்; கலெக்டரிடம் குற்றச்சாட்டு

/

கஞ்சா விற்பனை அமோகம்; கலெக்டரிடம் குற்றச்சாட்டு

கஞ்சா விற்பனை அமோகம்; கலெக்டரிடம் குற்றச்சாட்டு

கஞ்சா விற்பனை அமோகம்; கலெக்டரிடம் குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 10, 2024 11:20 PM

Google News

ADDED : ஜூன் 10, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, ஜூன் 11---

கூடுவாஞ்சேரி ஏரியை துார்வாரி சீரமைக்க வேண்டும் எனவும், பெருங்களத்துாரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது குறித்தும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப்- - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, அரசு பேருந்து சேவை, கல்வி கடன், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 214 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

முன்னதாக, சமூக பொறுப்பு நிதியின் கீழ், 39 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 17.68 லட்சம் ரூபாய் மதிப்பில், செயற்கை கை, கால்கள் மற்றும் 150 பயனாளிகளுக்கு, 6.54 லட்சம் ரூபாய் மதிப்பில், காதொலி கருவிகள், ஒரு பயனாளிக்கு, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனத்தை கலெக்டர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று, கூட்ட நடவடிக்கைகளை கவனித்தனர்.

கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுக்களின் விபரம்:

ஏரியை துார்வாருதல்


கூடுவாஞ்சேரி ஏரியில் களி மண் எடுக்கவும், துார் வராததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேக்க முடியாத நிலையும் உள்ளது.

உபரி நீர் வெளியேறும் போது, சாலைகளில் அதிகமாக தண்ணீர் செல்வதால் குடியிருப்புகளை சூழ்கிறது. இதனை தவிர்க்க, ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும்.

அதே போல், செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில், சீமைக்கருவேல் மரங்கள், வேப்ப மரங்கள் உள்ளன. அவற்றை மர்ம நபர்கள் வெட்டி விற்பனை செய்கின்றனர்.

இதனை தடுத்து, மரங்களை ஏலம் விட, கலெக்டர், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.

சென்னை, தாம்பரம் மாநகராட்சி பகுதியில், பெருங்களத்துார் குண்டுமேடு பகுதியில், கஞ்சா விற்பனை அதிகமாக நடக்கிறது. இதனை தடுக்க, துணை காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டது.

நரிக்குறவர்களுக்கு கடன்


சென்னை, பல்லாவரம் பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகிறன்றனர். இவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தர வேண்டும்.

சுய தொழில் துவங்க, வங்கி கடன் உதவி வழங்க வேண்டும். நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நரிக்குறவர்கள் சுய தொழில் துவங்க, உடனடியாக கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாட்கோ, வங்கி மேலாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us