/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
/
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு
ADDED : மே 01, 2024 01:07 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில், இருசக்கர வாகன கட்டண பார்க்கிங் வசதி உள்ளது. இது, நகராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், ஒப்பந்தம் பெறப்பட்ட இடத்தை தாண்டி, பேருந்து நிலைய வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தி, ஒப்பந்ததாரர் கட்டணம் வசூலிப்பதாக பயணியர் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பேருந்து நிலையத்தின் பின்புறம் பயணியர் செல்வதற்கான வழியையும் அடைத்து, அதன் இருபுறமும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, அதற்கும் கட்டணம் வசூலித்து வருகிறார்.
இது குறித்து, பயணியர் பல முறை புகார் அளித்தும், இதுவரை நகராட்சி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கட்டண பார்க்கிங் இடத்தை நகராட்சி அனுமதி பெறாமல் விரிவாக்கும் நோக்கில், பேருந்து நிலைய வளாக கட்டடத்தில் துளையிட்டு, இரும்பு வேலி அமைக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது, குபேரன் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் பயணியர் ஒன்றிணைந்து, பார்க்கிங் ஒப்பந்ததாரரின் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதனால், பயணியர் மற்றும் ஒப்பந்ததாரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது:
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து, தினமும் 90க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மற்றும் மாநகர பேருந்துகள் சென்று வருகின்றன.
பேருந்து நிலையத்தின் கடைசியில், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டண பார்க்கிங் நிரம்பியவுடன், பேருந்துகள் நிறுத்துமிடம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வாகனங்களை நிறுத்துகிறார். இதனால், பேருந்துகளை உள்ளே கொண்டு செல்லவும், வெளியே வரவும் சிரமமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.