/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முறையாக அமைக்காத சிமென்ட் சாலை வேங்கைவாசல் ஊராட்சியில் குற்றச்சாட்டு
/
முறையாக அமைக்காத சிமென்ட் சாலை வேங்கைவாசல் ஊராட்சியில் குற்றச்சாட்டு
முறையாக அமைக்காத சிமென்ட் சாலை வேங்கைவாசல் ஊராட்சியில் குற்றச்சாட்டு
முறையாக அமைக்காத சிமென்ட் சாலை வேங்கைவாசல் ஊராட்சியில் குற்றச்சாட்டு
ADDED : மார் 12, 2025 03:05 AM
சேலையூர்:தாம்பரத்தை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இவ்வூராட்சியில், ஒரு மாதத்திற்கு முன், சிமென்ட் சாலைகள் போடப்பட்டன.
இதில், கருணாநிதி சாலை ஏழாவது குறுக்கு தெரு, விக்னராஜபுரம் மூன்றாவது குறுக்கு தெரு, விக்னராஜபுரம், இரண்டாவது பிரதான சாலை ஆகிய சாலைகளில், அதிக அளவில் புழுதி பறந்ததால், அத்தெருவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து துாசி பறந்ததால், முறையாக சாலை போடவில்லை என, அப்பகுதிவாசிகள், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சில நாட்களுக்கு முன், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, இந்த மூன்று சாலைகள் மீது, ஒரு அங்குலம் உயரத்திற்கு மீண்டும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வேங்கைவாசல் ஊராட்சியில், எந்த பணியும் முறையாக நடப்பதில்லை. சிமென்ட் சாலைகளை முறையாக போடாத காரணத்தால் தான், அதிகளவில் துாசி பறந்து, இத்தெருவில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து புகார் தெரிவித்தோம். அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர். அதன்பின், ஏற்கனவே போடப்பட்ட சாலை மீது, மீண்டும் சாலை போடுகின்றனர். இதே போல், மற்ற சாலைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.