/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் ஒதுக்கீடு
/
மருத்துவமனைக்கு ரூ.51 லட்சம் ஒதுக்கீடு
ADDED : செப் 13, 2024 01:09 AM

செங்கல்பட்டு:அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க, சென்னை மண்டல மத்திய சேமிப்பு கழகம், நேற்று 51.50 லட்சம் ரூபாய் வழங்கியது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சீறுநீரக பிரிவு துறைக்கு துலியம் பைபர் லேசர் யூனிட் மற்றும் நெகிழ்வான சிறுநீர் குழாய் ரெனோ வீடியோஸ்கோப் வாங்க, 1.03 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. இந்த உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி உதவி வழங்க, கலெக்டருக்கு மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்தது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்க, சென்னை மண்டல மத்திய சேமிப்பு கழகம் சமூக பொறுப்பு நிதியின் கீழ், முதல்கட்டமாக 51.50 லட்சம் ரூபாயக்கான காசோலையை, கலெக்டர் அருண்ராஜுடம், மத்திய சேமிப்பு கிடங்கு மேலாளர் ராகுல் கெய்க்வாட் வழங்கினார்.
உடன், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார், துணை முதல்வர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.