/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்பங்களை ரசித்த தேர்தல் பொது பார்வையாளர்
/
மாமல்லை சிற்பங்களை ரசித்த தேர்தல் பொது பார்வையாளர்
மாமல்லை சிற்பங்களை ரசித்த தேர்தல் பொது பார்வையாளர்
மாமல்லை சிற்பங்களை ரசித்த தேர்தல் பொது பார்வையாளர்
ADDED : மார் 28, 2024 10:07 PM

மாமல்லபுரம்:சட்டசபை, லோக்சபாஆகிய தேர்தல்களில் செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை ஆகிய தொகுதிகளில், தேர்தல் பார்வையாளராக வெளிமாநில அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இங்குள்ள மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்வர். அதேபோல், தேர்தல் பொது பார்வையாளர்கள் தேர்தலுக்கு முன் அல்லது தேர்தல் முடிந்த பின் மாமல்லபுரம் சிற்பங்களை காண ஆர்வம் காட்டுவர்.
தற்போது, ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு, தேர்தல் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, திரிபுரா மாநில அதிகாரி அபிஷேக் சந்திரா, செங்கல்பட்டு பயணியர் விடுதியில்தங்கியுள்ளார்.
நேற்று, தன் மகனுடன் மாமல்லபுரம் வந்தார். இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் சுவாமியை தரிசித்து, பின் ஐந்துரதங்கள், கடற்கரை கோவில் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தார்.
சுற்றுலா வந்த பள்ளி மாணவியரிடம், படிக்கும் வகுப்பு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்து வாழ்த்தினார். திருப்போரூர் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதம், தாசில்தார்கள், திருக்கழுக்குன்றம் ராஜேஸ்வரி, திருப்போரூர் பூங்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

