/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தபுத்தேரியில் புறக்காவல் நிலையம் தயார்
/
அனுமந்தபுத்தேரியில் புறக்காவல் நிலையம் தயார்
ADDED : செப் 07, 2024 07:35 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், அனுமந்தபுத்தேரி, ராமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், வசிப்பிட பகுதிகள் அதிகமாக உள்ளன. இப்பகுதிகளில், அடிக்கடி ரவுடிக்குள் மோதல், திருட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இதனை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டாலும், குற்றச்சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக, அனுமந்தபுத்தேரி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க, நகர போலீசார் முடிவு செய்தனர்.
அதன்பின், புறக்காவல் நிலையம் புதியதாக கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயராக உள்ளது. இந்த காவல் நிலையத்தில், 24 மணி நேரமும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என, போலீசார் தெரிவித்தனர்.