/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லாரி மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
/
லாரி மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி
ADDED : ஆக 21, 2024 10:30 PM
மறைமலைநகர்:உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி கன்டெய்னர் லாரி, நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 49, என்பவர் ஓட்டினார்.
மறைமலைநகர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னே சென்ற 'பஜாஜ் பல்சர்' பைக்கில் மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள அரசு விபத்து அவசர சிகிச்சை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்துனர். இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.