/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனந்தமங்கலம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
/
அனந்தமங்கலம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
அனந்தமங்கலம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
அனந்தமங்கலம் நிழற்குடை சேதம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 01, 2024 01:08 AM

அச்சிறுபாக்கம்:ஒரத்தி அருகே அனந்தமங்கலம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில், அனந்தமங்கலம் மேட்டுத்தெரு பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.
அந்த நிழற்குடை உரிய பராமரிப்பின்றி, கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம், அபாயகரமான நிலையில் உள்ளது.
இதனால், பேருந்து பயணியர் சாலையில் வெயிலில் நின்று, பேருந்துக்காக காத்திருந்து, பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது, பழைய நிழற்குடை உள்ள பகுதியில், இருபுறமும் கழிவுநீர் கால்வாய் உள்ளதால், பெருமாள் கோவில் மதில் சுவர் ஓரம் உள்ள காலி இடத்தில், புதிய நிழற்குடை அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.