/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆண்டார்குப்பத்தினர் கோரிக்கை
/
புது நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆண்டார்குப்பத்தினர் கோரிக்கை
புது நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆண்டார்குப்பத்தினர் கோரிக்கை
புது நீர்த்தேக்க தொட்டி கட்ட ஆண்டார்குப்பத்தினர் கோரிக்கை
ADDED : பிப் 28, 2025 11:46 PM
சூணாம்பேடு, சூணாம்பேடு அருகே வன்னியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
குளக்கரை அருகே 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
நீர்த்தேக்க தொட்டியின் துாண்கள் சேதமடைந்து பலவீனமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 2022ம் ஆண்டு குடிநீர் தொட்டி இணைப்புகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து, குடிநீர் கிணற்றில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய்களை இணைத்து, மின்மோட்டார் வாயிலாக தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.குழாய்கள் நேரடியாக மின்மோட்டாரில் இணைக்கப்பட்டு உள்ளதால், குழாய்களில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது.
மேலும், மின்சாரம் இல்லாத நேரங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, அதன் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.