/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழுப்பேடு ஊராட்சியில் அங்கன்வாடி கட்டட பணி
/
தொழுப்பேடு ஊராட்சியில் அங்கன்வாடி கட்டட பணி
ADDED : ஆக 05, 2024 12:18 AM
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு ஊராட்சியில் உள்ள பழைய அங்கன்வாடி மையக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தொழுப்பேடு- - சூணாம்பேடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், தொழுப்பேடு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், அங்கன்வாடி மையம், 20 குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன், கட்டடம் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு பழமையானதால், தற்காலிகமாக நுாலக கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை அடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 2024 -- 25ம் நிதி ஆண்டில், 16.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அங்கன்வாடி மையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
தற்போது, 20 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.