/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி நெருக்கடியில் குழுந்தைகள் அவதி
/
வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி நெருக்கடியில் குழுந்தைகள் அவதி
வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி நெருக்கடியில் குழுந்தைகள் அவதி
வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி நெருக்கடியில் குழுந்தைகள் அவதி
ADDED : ஜூலை 06, 2024 10:31 PM
செய்யூர்:செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட தேவராஜபுரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் படிக்கின்றனர்.
மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பராமரிப்பு இன்றி நாளடைவில் பழுதடைந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடி மையம், தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
தற்போது வரை புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்கப்படமால் உள்ளதால், தனியார் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்,
எனவே, குழந்தைகளின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவராஜபுரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.