/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 05, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய், அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். இலவச பேருந்து பயண அட்டை, காசில்லா மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
பின், மாவட்ட தலைவர் பக்ரீ தலைமையிலான சங்க உறுப்பினர்கள், மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர்.