/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கள்ளச்சாராயம் ஒழிப்பு கலெக்டர் ஆலோசனை
/
கள்ளச்சாராயம் ஒழிப்பு கலெக்டர் ஆலோசனை
ADDED : ஆக 07, 2024 02:33 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம், போதைப் பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து, வருவாய் துறையினர் தகவல் அளித்தனர்.
இந்த தகவல்கள், சம்பந்தப்பட்ட பகுதி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
சாராயத்தில் மெத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு, பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்ய, மருத்துவத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மெத்தனால் கலந்த சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
இதற்காக, புதிய ஆய்வு கூடங்கள் தேவை என்றால், மருத்துவத் துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.