/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாயை துார்வார செங்கையில் எதிர்பார்ப்பு
/
மழைநீர் கால்வாயை துார்வார செங்கையில் எதிர்பார்ப்பு
மழைநீர் கால்வாயை துார்வார செங்கையில் எதிர்பார்ப்பு
மழைநீர் கால்வாயை துார்வார செங்கையில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 27, 2024 01:10 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அழகேசன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில், மழைநீர் கால்வாய்கள் உள்ளன.
மழைநீர் கால்வாய்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால், மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கன மழை பெய்யும்போது, மழைநீருடன் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க, வடகிழக்கு பருவமழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதனால், மழைக்காலத்திற்கு முன், கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகராட்சி ஆணையருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். எனவே, மழைநீர் கால்வாய் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.