/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூட் மேப் அப்டேட்டில் தீவிரம்
/
மதுராந்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூட் மேப் அப்டேட்டில் தீவிரம்
மதுராந்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூட் மேப் அப்டேட்டில் தீவிரம்
மதுராந்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூட் மேப் அப்டேட்டில் தீவிரம்
ADDED : ஜூலை 03, 2024 12:37 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில், ஆப்பிள் நிறுவனம் சார்பில் ரூட் மேப்பை அப்டேட்செய்யும் பணியில்,அந்நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2012ல்,ஆப்பிள் மேப் நிறுவனம் துவங்கியது.உலகம் முழுதும் வாடிக்கையாளர்களுக்கு சரியான ரூட் மேப்தரவுகளை வழங்கிவருகிறது.
கோவில்கள், சாலை சந்திப்புகள், பேருந்து நிறுத்தம், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனை, மெடிக்கல், காவல் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் வீடியோவாகவும், படங்களாகவும், ஆப்பிள் மேப் நிறுவனம் பதிவு செய்துவருகிறது.
அந்த வகையில், சமீப காலங்களாக தமிழ்நாட்டில் பணியை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, நேற்று கருங்குழி,மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலைபகுதிகளில் வாகனத்தில் சென்று, நவீன கேமராக்கள் வாயிலாக வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் வரைப்படத்தை பதிவு செய்யப்பட்டு வருகிறது.