/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துவக்க கல்வி ஆசிரியர் பட்டயம் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
துவக்க கல்வி ஆசிரியர் பட்டயம் விண்ணப்பங்கள் வரவேற்பு
துவக்க கல்வி ஆசிரியர் பட்டயம் விண்ணப்பங்கள் வரவேற்பு
துவக்க கல்வி ஆசிரியர் பட்டயம் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 30, 2024 12:48 AM
பவுஞ்சூர்,:பவுஞ்சூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2024 - -25ம் கல்வி ஆண்டிற்கான துவக்க கல்வி பட்டய படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை, மே 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. படிப்பில் சேர, மேல்நிலைப் பள்ளி தேர்வில், பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பட்டியலினம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
பட்டய படிப்பில் சேர விரும்பும் மாணவ - மாணவியர், www.https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்கள் அறிய, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.