/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணு ஆராய்ச்சி மைய மருத்துவ பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
அணு ஆராய்ச்சி மைய மருத்துவ பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
அணு ஆராய்ச்சி மைய மருத்துவ பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
அணு ஆராய்ச்சி மைய மருத்துவ பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 01, 2024 11:48 PM
கல்பாக்கம்:கல்பாக்கம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், அறிவியலாளர் - மருத்துவம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி துறையின்கீழ், கல்பாக்கத்தில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இயங்குகிறது. இதில், வெவ்வேறு மருத்துவ பிரிவுகளில், இ, டி, சி, ஆகிய கிரேடுகளில், சயின்டிபிக் ஆபீசர், பி கிரேடு டெக்னிக்கல் ஆபீசர், சி, பி ஆகிய கிரேடுகளில், சயின்டிபிக் அசிஸ்டன்ட் என, 47 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், ஏ கிரேடு நர்ஸ், பி கிரேடு பார்மசிஸ்ட், பி கிரேடு டெக்னீஷியன், 44 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணிகளுக்கு, நேற்று துவங்கி ஜூன் 30ம் தேதி வரை, 'ஆன்லைன்' வாயிலாக, விண்ணப்பிக்கலாம் என்றும், அணுசக்தி துறை பணிகளில் பெண்கள் ஆர்வம் காட்டுமாறும், இம்மைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் http://www.igcar.gov.in/recruitment.html என்ற இணையதளத்தில், கல்வித் தகுதி, வயது வரையறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.