/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 28, 2024 11:20 PM
செங்கல்பட்டு:டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
இந்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்த நபர்களுக்கு, டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது வழங்குவதற்கு, இந்திய அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்விருதிற்கான விண்ணப்பங்களை, https://awards.gov.in/ இணையதள முகவரியில், வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண் 74017 03461 தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.