/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்களுக்கான விடுதிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மாணவர்களுக்கான விடுதிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 26, 2024 09:48 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் தங்கிப் படிக்க, பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிற்படுத்தப்பட் டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர், மாணவியருக்கென 14 விடுதிகள் உள்ளன.
இதில், நந்திவரம், கருங்குழி, மதுராந்தகம், எல்.எண்டத்துார், ஒரத்தி ஆகிய பகுதிகளில், அரசினர்பள்ளி மாணவர் விடுதிகள் உள்ளன.
திருப்போரூர், மதுராந்தகம், அனகாபுத்துார் ஆகிய பகுதிகளில், அரசினர் பள்ளி மாணவியர் விடுதிகள் உள்ளன.
இங்கு தங்கிப்படிக்க, 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தகுதியுடைய மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விடுதி காப்பாளர்அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், கல்லுாரி மாணவ -- மாணவியருக்கு செங்கல்பட்டு, தாம்பரம், நெம்மேலி ஆகிய பகுதிகளில், தலா மூன்று விடுதி கள் உள்ளன.
இங்கு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் கல்லுாரி மாணவ, மாணவியர் தங்கி படிக்கலாம்.
அதற்கு விரும்புவோர், விடுதி காப்பாளர்அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில்விண்ணப்பம் பெற்று, வரும் ஜூலை 16ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.