/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரும்பாக்கம் அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமனம்
/
கரும்பாக்கம் அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமனம்
கரும்பாக்கம் அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமனம்
கரும்பாக்கம் அரசு பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமனம்
ADDED : ஆக 21, 2024 09:05 AM
திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 92 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட, நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இரண்டு ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால், தற்போது தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், அதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை சார்பில், மேற்கண்ட பள்ளியில் கூடுதலாக இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.