/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சி லோக்சபா தொகுதிக்கு பொது பார்வையாளர் நியமனம்
/
காஞ்சி லோக்சபா தொகுதிக்கு பொது பார்வையாளர் நியமனம்
காஞ்சி லோக்சபா தொகுதிக்கு பொது பார்வையாளர் நியமனம்
காஞ்சி லோக்சபா தொகுதிக்கு பொது பார்வையாளர் நியமனம்
ADDED : மார் 25, 2024 06:16 AM
காஞ்சிபுரம், : தேர்தல் நடைபெறும் தொகுதிகளில், வேட்பாளரின் செலவுகளை கண்காணிக்கவும், தேர்தல் கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் செலவிடுகின்றனரா என கண்காணிக்க, இந்திய வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு, மதுக்கர்ஆவேஸ் என்பவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு சந்தோஷ்சரண் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும், ஏற்கனவே காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் தேர்தல் செலவின பணிகளை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., நிலையிலான அதிகாரி பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் தொகுதிக்கு, பூபேந்திரசவுத்ரி என்பவர் பொது பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இன்று அல்லது நாளை காஞ்சிபுரம் வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகளை இவர் முழுமையாக கண்காணிப்பார்.

