/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்பின் பிடியில் குளங்கள் பருவமழைக்குள் துார்வாரப்படுமா?
/
ஆக்கிரமிப்பின் பிடியில் குளங்கள் பருவமழைக்குள் துார்வாரப்படுமா?
ஆக்கிரமிப்பின் பிடியில் குளங்கள் பருவமழைக்குள் துார்வாரப்படுமா?
ஆக்கிரமிப்பின் பிடியில் குளங்கள் பருவமழைக்குள் துார்வாரப்படுமா?
ADDED : ஆக 12, 2024 11:50 PM

மாமல்லபுரம் : மாமல்லபுரத்திற்கு குடிநீராதாரமாக விளங்கும் வெண்புருசம் குளத்தை, ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டு, துார்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாமல்லபுரம் பேரூராட்சியின் 15வது வார்டாக வெண்புருஷம் பகுதி உள்ளது. இங்கு அல்லி பொய்கை, தாங்கல், வேப்பங்குட்டை, வண்ணான்குட்டை உள்ளிட்ட குளங்கள் உள்ளன.
நீண்ட காலத்திற்கு முன், இந்த குளங்களை பயன்படுத்தி விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வந்தன. நாளடைவில், விவசாயம் கைவிடப்பட்ட நிலையில், இந்த குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கின. இதனால், குளங்களின் பரப்பளவு குறைந்தது. மேலும், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளன.
இப்பகுதி குடிநீர் தேவைக்காக, பேரூராட்சி நிர்வாகம், குளத்தின் ஒரு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை தொட்டியில் நீரேற்றி, குழாய்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்பின், மாமல்லபுரம் அண்ணா நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கும், இப்பகுதியில் இருந்து பெறப்படும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீரின் தரம், சுவையை விரும்பி, மற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாக ராணுவ வீரர்கள், இப்பகுதி குடிநீருக்காக, இங்கு படையெடுக்கின்றனர்.
எனவே, நீராதார அவசியம் கருதி, குளங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு, துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

