/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுருக்குமடி வலையில் மீன்பிடி மீனவர்களிடையே வாக்குவாதம்
/
சுருக்குமடி வலையில் மீன்பிடி மீனவர்களிடையே வாக்குவாதம்
சுருக்குமடி வலையில் மீன்பிடி மீனவர்களிடையே வாக்குவாதம்
சுருக்குமடி வலையில் மீன்பிடி மீனவர்களிடையே வாக்குவாதம்
ADDED : ஆக 05, 2024 12:20 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம் பகுதி மீனவர்கள், மீன் பிடிப்பதற்காக நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். அதேபோல், கொக்கிலமேடு பகுதி மீனவர்களும் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
கடலில் குறிப்பிட்ட துாரத்தில் கோவளம் பகுதி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கொக்கிலமேடு பகுதி மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர்.
இதை அறிந்த கோவளம் மீனவர்கள், கொக்கிலமேடு மீனவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால், மீன் இனம் அழிந்து விடும் என, கடுமையாக பேசியுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில், கோவளம் மீனவர்கள், கொக்கிலமேடு மீனவர்களின் இரண்டு படகுகள் மற்றும் அவற்றில் இருந்த சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து, கோவளம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
தகவல் அறிந்து வந்த நீலாங்கரை மீன்வளத் துறையினர், இரு தரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின், கொக்கிலமேடு மீனவர்களின் இரண்டு படகுகள் மற்றும் சுருக்குமடி வலையை அவர்களிடமே ஒப்படைத்து, அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.