/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிரியாணி கடையில் தகராறு; வாலிபர் இருவருக்கு வலை
/
பிரியாணி கடையில் தகராறு; வாலிபர் இருவருக்கு வலை
ADDED : மே 05, 2024 11:58 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராமலிங்கம், 55. செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம், இங்கு பிரியாணி சாப்பிட வந்த இரண்டு வாலிபர்கள், பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ஜோதிராமலிங்கத்திடம் சண்டையிட்டு, கையில் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து, ஜோதிராமலிங்கம் மகன் அசோக்குமார், 32, அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், பிரியாணி கடையில் சண்டையிட்ட நபர்கள், செங்கல்பட்டு சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த ரிஷி, முகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.