/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மது அருந்தும் போது தகராறு பாட்டிலால் தாக்கியவர் கைது
/
மது அருந்தும் போது தகராறு பாட்டிலால் தாக்கியவர் கைது
மது அருந்தும் போது தகராறு பாட்டிலால் தாக்கியவர் கைது
மது அருந்தும் போது தகராறு பாட்டிலால் தாக்கியவர் கைது
ADDED : செப் 04, 2024 01:45 AM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட, கீழ்மருவத்துார் பகுதியில், அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று, கீழ்மருவத்துார் பகுதியைச் சேர்ந்த சேகர், 47, மற்றும் சுரேஷ், 41, ஆகியோர், மதுபாட்டில் வாங்கியபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின், மது வாங்கிக் கொண்டு, அரசு மதுபான கடை அருகே, தனித்தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது, மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சுரேஷ் என்பவர் சேகரை அசிங்கமாக திட்டி, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து, சேகரின் கழுத்து மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.
இதில், சேகர் பலத்த காயமடைந்து, கீழே சரிந்துள்ளார். அங்கிருந்தவர்கள் சேகரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார், வழக்கு பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர். பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் கிளைச்சிறையில் அடைத்தனர்.