/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மகளிர் விடுதி முன் நிர்வாண போஸ் கொடுத்தவர் கைது
/
மகளிர் விடுதி முன் நிர்வாண போஸ் கொடுத்தவர் கைது
ADDED : ஜூன் 01, 2024 04:30 AM
சென்னை : சென்னை, பாரிமுனை முத்துசாமி சாலையில், அரசு பல் மருத்துவமனை மகளிர் விடுதி உள்ளது. இதன் அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தின் மீது நேற்று, 48 வயது மதிக்கதக்க ஆண் நபர் உடலில் ஒட்டு துணியில்லாமல், நிர்வாணமாக விடுதியை நோக்கி போஸ் கொடுத்து நின்று கொண்டிருந்தார்.
இதை பார்த்த விடுதி காவலாளி வெங்கடேசன், விடுதியின் மேலாளர் மாலினி, 42 என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்துபூக்கடை காவல் நிலையத்தில் மேலாளர் புகார்அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிர்வாணமாக நின்று கொண்டிருந்தவரை உடையை அணியச் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அடர்ல கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், 48 என்பதும், திருமணமாகத விரக்தியில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.