/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொளத்துார் வி.ஏ.ஓ., ஆபீஸில் தகராறு செய்த நபர் கைது
/
கொளத்துார் வி.ஏ.ஓ., ஆபீஸில் தகராறு செய்த நபர் கைது
கொளத்துார் வி.ஏ.ஓ., ஆபீஸில் தகராறு செய்த நபர் கைது
கொளத்துார் வி.ஏ.ஓ., ஆபீஸில் தகராறு செய்த நபர் கைது
ADDED : மே 10, 2024 01:49 AM
மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்படுவதாக, கொளத்துார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் காலை புகார் வந்தது.
இதையடுத்து, அந்த இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள், அங்கு நடைபெறும் பணிகளை தடுத்து நிறுத்தி, கட்டுமானப் பொருட்களை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வந்த, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ராமமூர்த்தி, 46, என்பவர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் நந்தகுமார் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நேற்று நந்தகுமார் பாலுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாலுார் போலீசார் ராமமூர்த்தியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.