/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'அஸ்மிதா' மாநில ஹாக்கி 'லீக்' எட்டு அணிகள் பலப்பரீட்சை
/
'அஸ்மிதா' மாநில ஹாக்கி 'லீக்' எட்டு அணிகள் பலப்பரீட்சை
'அஸ்மிதா' மாநில ஹாக்கி 'லீக்' எட்டு அணிகள் பலப்பரீட்சை
'அஸ்மிதா' மாநில ஹாக்கி 'லீக்' எட்டு அணிகள் பலப்பரீட்சை
ADDED : மார் 05, 2025 11:44 PM

சென்னை, 'கேலோ இந்தியா'மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு இணைந்து, 'அஸ்மிதா' என்ற தலைப்பில், மகளிருக்கான மாநில ஹாக்கி, 'லீக்' போட்டிகளை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், கடந்த மாதம் 24 - 27ம் தேதி வரை, ஜூனியர் பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, சப் - ஜூனியருக்கான லீக் போட்டிகள், நேற்று முன்தினம் எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் துவங்கின.
போட்டியில், புதுக்கோட்டை, வேலுார், கோவை, சிவகங்கை, ஈரோடு, திருவண்ணா மலை, திண்டுக்கல் மற்றும் துாத்துக்குடி ஆகிய எட்டு மாவட்ட அணிகள் பங் கேற்றுள்ளன.
இந்த எட்டு அணிகளும், 'ஏ' மற்றும் 'பி' என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'லீக்' முறையில் மோதுகின்றன.
நேற்று காலை நடந்த போட்டியில், திண்டுக்கல் - திருவண்ணாமலை அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில், திருவண்ணாமலை அணி 4 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அணியின் வீராங்கனை ஸ்வாதி, மதுஸ்ரீ, ஓவியாமற்றும் ரக் ஷயா ஆகியோர், தலா ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவினர்.
மற்றொரு போட்டியில், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை அணிகள் எதிர்கொண்டன. அதில், 8 - 1 என்ற கணக்கில், புதுக்கோட்டை வெற்றி பெற்றது.
புதுக்கோட்டை அணியின் ஹரிதா மூன்று கோல்களும், கோபிகா இரண்டு கோல்கள், அபிராமி, ஹேமமாலனி, ஸ்ரீநிதி ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்தனர்.
சிவகங்கை வீராங்கனை டாப்னே ஞானா செலஸ்டா ஒரு கோல் அடித்து ஆறுதல் கொடுத்தார்.
போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.