/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆத்துார் அரசு மீன் பண்ணை செங்கை கலெக்டர் சோதனை
/
ஆத்துார் அரசு மீன் பண்ணை செங்கை கலெக்டர் சோதனை
ADDED : ஜூலை 04, 2024 12:42 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சியில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், மீன் வளத்துறை சார்பில் மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணை உள்ளது.
சுமார் 12.5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த பண்ணையில், கட்லா, திலேப்பியா, லோகு, கெண்டை,தேங்காய் பாறை உள்ளிட்ட மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த பண்ணையை, நேற்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, மீன் குஞ்சுகளை நிலைப்படுத்தும் தொட்டி, மீன் தீவனஅறை, மீன் வளர்ப்பு குளங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து, பள்ளி மாணவ -- மாணவியரை அழைத்து வந்து, மீன் வளர்ப்பு குறித்து விளக்கவும், மீன் பண்ணையை சுத்தமாக பராமரிக்கவும்,வட்டார அளவில் உள்ள ஏரி, குளங்களில் அதிக அளவில் மீன்களை வளர்த்து விற்பனைசெய்யவும் அறிவுறுத்தினார்.
மேலும், கலெக்டர் அலுவலகத்தில், சுய உதவிக்குழுக்கள் வாயிலாக மீன் உணவகம் திறந்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மீன்வளத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தினார்.
இந்த பண்ணையில், 2023- - 24ம் நிதி ஆண்டில்,20 லட்சம் மீன் குஞ்சு களும், 2024- - 25ம் நிதி ஆண்டில் 4.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மேலும், 33 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக, மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது, செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி, மீன் வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.