/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டீ கடைக்காரர் மீது தாக்குதல்; கீழக்கரணையில் இருவர் கைது
/
டீ கடைக்காரர் மீது தாக்குதல்; கீழக்கரணையில் இருவர் கைது
டீ கடைக்காரர் மீது தாக்குதல்; கீழக்கரணையில் இருவர் கைது
டீ கடைக்காரர் மீது தாக்குதல்; கீழக்கரணையில் இருவர் கைது
ADDED : ஆக 20, 2024 05:35 AM
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரமோத்குமார், 30. அதே பகுதியில், டீ கடை நடத்தி வருகிறார். அவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல கடையை மூடிவிட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை கத்தியைக் காட்டி வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், பிரமோத்குமாரை தாக்கி மொபைல் போன் மற்றும் 650 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இது குறித்து, பிரமோத்குமார் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து, போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட கீழக்கரணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளி, 38, அவரது நண்பர் பாலசுப்பிரமணியம், 35, இருவரையும் கைது செய்தனர்.
இருவரும், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில், காளிக்கு வலது கையிலும், பாலசுப்பிரமணியத்திற்கு இடது கையிலும் முறிவு ஏற்பட்டது. இருவரும், சிகிச்சைக்கு பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.