ADDED : ஆக 12, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் : தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், பதுவஞ்சேரியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில், வரும் 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
இதற்கான முன்பதிவு வரும் 16ல் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, ஆயுதப்படை வளாகத்தில் நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர், தங்களின் அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவெண் சான்று, முன்பணம் 1,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பணம் செலுத்தியவர்கள், 19ல் நடக்கும் ஏலத்தில் பங்கேற்கலாம்.

